ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Tuesday, May 24, 2011

காலபைரவ அஷ்டகம் Kalabhairava Ashtakam with English subtitles.



காலபைரவ அஷ்டகம்

தேவ ராஜ சேவ்ய மான பாவனாக்ரி பங்கஜம்
வ்யால யஞ்க சூத்ர மிந்து சேகரம் கிருபாகரம்
நாரதாதி யோகி விருந்த வந்திதம் திகம்பரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே

பானு கோட்டி பாஸ்வரம் , பவாப்தி தாரகம் பரம்
நீலகண்ட மீப்சிதார்த்த தாயக்கம் திரிலோஷனம்
கால கால மம்புஜாக்ச மக்ஷ சூழ மக்ஷரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே

சூல தண்ட பாச தண்ட பாணி மாதி காரணம்
ஷ்யாம காய மாதி தேவமக்ஷரம் நிராமயம்
பீம விக்ரமம் பிரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே

புக்தி முக்தி தாயக்கம் பிரசஷ்த சாரு விக்ரகம் ,
பக்த வத்சலம் சிவம் . சமஸ்த லோக விக்ரகம்
விநிக்வணன் மனோக்ன ஹேம கிண்கிணி லசத் கடீம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே

தர்ம சேது பாலகம் த்வ தர்ம மார்க்க நாசகம்
கர்ம பாச மோச்சகம் சுஷர்ம தாயக்கம் விபும்
சுவர்ண வர்ண சேஷ பாச ஷோபிதாங்க மண்டலம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே

ரத்ன பாதுக பிரபபிராம பாதயுக்மகம்
நித்யமத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்
ம்ருத்யு தர்ப்ப நாசனம் கராலடம்ஷ்ற்ற மோக்ஷனம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே

அட்டஹாச பின்ன பத்ம சண்ட கோச சந்ததிம்
திருஷ்டி பாட நஷ்ட பாப ஜால முக்ர சாசனம்
அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே

பூத சங்க நாயகம் , விசால கீர்த்தி தாயகம்
காசி வாச லோக புண்ய பாப ஷோதகம் விபும்
நீதி மார்க்க கொவிதம் புராதனம் ஜகத்பதிம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே

காலபைரவாஷ்டகம் படந்தி யெ மனோகரம்
ஞான முக்தி சாதகம் விசித்ர புண்ய வர்த்தனம்
சோக மோக தைன்ய லோப கோப தாப நாசனம்
தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி சந்நிதிம் த்ருவம்
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே
காலபைரவம் பஜே
காலபைரவம் பஜே
ஒம்

Sunday, May 1, 2011

வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன் [அகத்தியர் ]



வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானிலம் மீதினில் யார் இனி வருவார்
வீணையில் இன்னிசை தேனென தந்திடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்

வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன்
என்னையும் உன்னையும் ஆடிட வைத்திடுவான்
பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்

இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்
எனை தேடி எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன்
எனை தேடி எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
நடித்தான் தமிழை படைத்தான்
இசையை வடித்தான் தன்னை மறந்தவனே
முத்தமிழ் புலமை சித்தனும் எனது வித்தகம் கண்டு பரிவுடனே
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்

ஆரபிமானம் மானம் கொள்வார்
ஆரபிமானம் மானம் கொள்வார்
பெரும் அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனை இகழ்ந்தனையே
ஆரபிமானம் மானம் கொள்வார்
வெற்றி எட்டு திசை முட்டவே
பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா
தனித்து நினைத்து மனத்தை மறைத்து
கொடுத்த வரத்தினை கணத்தில் மறந்தனையே
ஆரபிமானம் மானம் கொள்வார்

சண்முகப்பிரியன் எனும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
சண்முகப்பிரியன் எனும் தைரியமா
இனிய சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா

நாடகமா தர்பார் நாடகமா
அடக்குமுறை தர்பார் நாடகமா
எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா

அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்

அனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்

அம்சத்வனி அமைந்த மன்னவன் நான்

அனைத்தும் உன் வசம்தானா ஆணவம் ஏன்

மோகன கானம் நான் மீடிடுவேன்

மனோ லயம் இல்லை உன் பாட்டினிலே

மோகன கானம் நான் மீடிடுவேன்

மனோ லயம் இல்லை உன் பாட்டினிலே

பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
யார் வந்தால் என்ன காம்போதி
யார் வந்தால் என்ன காம்போதி
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்

கௌரி மனோகரி துணை இருப்பாள்
கௌரி மனோகரி துணை இருப்பாள்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
சரஸ்வதி என்நாவில் குடியிருப்பாள்
சரஸ்வதி என்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்
உன்னை வென்றிடுவேன்

ச ம ப த ரி ச ரி ம ச த ம க ம ப த ப த சமம்மா

க ம க ச நி ச ச ம க ச சமம்மா நீ சமம்மா

பண்ணிநேர் மொழியான் உமை பங்கரோ [தாழ் திறவாய் மணிகதவே தாழ் திறவாய்] திருவருட்செல்வர்



பண்ணிநேர் மொழியான் உமை பங்கரோ
மன்ணணினா வலன்செய் மறை காடரோ
கண்ணினா உனை காண கதவினை
திண்ணமாக திறந்தருள் செயமிலே
தாழ் திறவாய் மணிகதவே தாழ் திறவாய்
ஆலய மணிகதவே தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
மறை நாயகன் முகம் காண தாழ் திறவாய்
ஆலய மணிகதவே தாழ் திறவாய்
மனக்கதவம் திறந்த பரம்பொருளே
திருக்கதவும் திறக்க வரமருளே
மனக்கதவம் திறந்த பரம்பொருளே
திருக்கதவும் திறக்க வரமருளே
இருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே
இருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே
எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்
இருக்கரம் கூப்பி உன்னை வலம் வரவே
எங்கும் சிவமயமாய் மலர தாழ் திறவாய்
ஆலய மணிகதவே தாழ் திறவாய்
ஆடும் திருவடி கோலம் அறிந்திட அரனே தாழ் திறவாய்
அன்னையின் மார்பினில் பொன்மணி கண்டிட சிவனே தாழ் திறவாய்
அருள்நெறி தெளிவுற திருமறை புகழ் பெற அன்பே தாழ் திறவாய்
ஒருமுறை இருமுறை பலமுறை கேட்டேன் ஒளியே தாழ் திறவாய்
இறைவா தாழ் திறவாய் எம் தலைவா தாழ் திறவாய்
கதவே தாழ் திறவாய் தாழ் திறவாய்

சிவமயமே எங்கும் சிவமயமே
இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
இனி பவபயம் இல்லை எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே
சிவமயமே எங்கும் சிவமயமே

மதுரம் மறை நான்காம் துதி செய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறை காட்டுறை மைந்தா
இது நன்கு இறை பெய்த்தருள் செய்த எனக்கும்
கதவன் திருகாப்பு கொள்ளும் கருத்தாக

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை - அகத்தியர்



தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை


தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்

மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு

கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை