ஓம் விநாயகா போற்றி ஓம் சிவாயநம ஓம் சக்தி ஓம் சரவணபவ

ஓம் விநாயகா போற்றி......................ஓம் சிவாயநம.................ஓம் சக்திஓம் ......................ஓம் சரவணபவ

Sunday, May 1, 2011

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை - அகத்தியர்



தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை


தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்

மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு

பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு

கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையும் தாயும் கடவுளும் ஒன்று

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை

தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

9 comments:

  1. அற்புதமான பாடல் வரிகள்

    ReplyDelete
  2. மிகவும் அருமை.

    ReplyDelete
  3. ஆழ்ந்த கருத்துக்கள்

    ReplyDelete
  4. இந்த படத்தின் பெயர் என்ன ஜி

    ReplyDelete
  5. பாடல் மிகவும் அருமையான கருத்துக்கள் இந்த பாடல் தாய் தந்தையருக்காக எழுதப்பட்டது தாய் தந்தை ஞாபகம் வரும் போது நானும் இந்த பாடல் பாடுவேன் மனதுக்கு ஆறுதலாக இருக்கும்

    ReplyDelete